பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

11. ‘தாழ்மையில்’ கெம்பீரிக்கும் இயேசுவின் இரட்சிப்பு!

தேதி: 29.10.2018

கட்டுகள் நிறைந்த மனுஷருக்கு, இரட்சகராய் உதித்தார் இயேசு! தன் உயிர் தந்து, இரத்தம் சிந்தி, ‘மானிடருக்கு’ பாவ மன்னிப்பையும் இரட்சிப்பின் வழியையும் உண்டாக்கினார்! ஆகிலும், நாம் “முற்றும் முடிய இரட்சிக்கப்பட” தன் ஜீவிய வழியையும் காண்பித்தார்! ‘மானிடன்’ ஆகிய யாவருக்கும் முன்னோடியாய், அவர் தன்னை தாழ்த்தினார் என்பதே “நாம் முற்றும்முடிய இரட்சிக்கப்பட” அவர் காண்பித்த ஜீவ வழியாகும்!

மரியாளின் “அடிமையின் தாழ்விடத்தை (டுடிறடல)”தேவன் நோக்கிப் பார்த்தார்! (லூக்.1:48). தேவன் தன் குமாரனாகிய இயேசுவை “ஆசீர்வதித்து உயர்த்திட” இந்த தாழ்விடமான மாட்டுக்குடில் மாத்திரமல்ல.... மனுஷரால் அசட்டை செய்யப்பட, புறக்கணிப்பட, நெருக்கப்பட, ஒடுக்கப்பட..... அனுமதித்து, அதற்கு இயேசு மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தபடியால், “பிதாவின் கரத்தில் உண்டான சகல ஆசீர்வாதமும்” அவருக்கு வாய்த்திடச் செய்தார்! என ஏசா.53:10 கூறுவதை கவனியுங்கள்! மனுபுத்திரராகிய நாம் கர்த்தரிடம் பெற்றிடும் ஆசீர்வாதமும், இரட்சிப்பும் “தாழ்மையின் சந்தர்ப்பத்தில்” மாத்திரமே உண்டு என அறிந்து, குருவின் தாழ்மை அடிச்சுவட்டில், மகிழ்வுடன் நடப்போமாக!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!