அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
எளிய மாட்டுத்தொழுவம், விண்ணவரை இந்த மண்ணுக்கு வரவழைத்ததே, நம் இரட்சிப்பின் நற்செய்தி! எப்படி? “நம் பாவம் மன்னிக்கப்படும் விடுதலை! திருமண விழாவில் ‘இல்லை’ என்ற குறை, ருசியுள்ள மதுரமாகிய விந்தை! ஏழ்மையான அப்பமும் மீனும், பல்லாயிர மக்களை திருப்திப்படுத்திய அற்புதம்!.... “இத்தனை நன்மைகள்” இப்பாருலக மக்களுக்கு சொந்த மன்றோ! இவ்வாறு, “முற்றிலும் நம்மை இரட்சித்திட” மன்னவன் இயேசு, நம்மைத் தேடி இந்த பூமிக்கு வந்ததே மாபெரும் இரட்சிப்பு! (எபி.7:25).
பலகோடி எளிய மக்கள் நடுவில் ஒருவராக வந்த விந்தையை மகிழ்ந்து, வானிலிருந்து இறங்கி வந்த தூதர்கள் “இந்த பூமியிலே அவர் தந்த சமாதானத்தையும்; மனுஷர்மேல் அவர் வைத்த பிரியத்தையும்” பாடி, கொண்டாடி மகிழ்ந்தனர்! அந்த புனித மகிழ்ச்சி நம் எல்லோர் இருதயத்திலும் தங்குவதாக! ஆமென்