அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
28.04.2025
17. உங்கள் சபை, சுவிசேஷ ஊழிய ஆர்வம் கொண்ட சபைதானா?
“இதோ, இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும்” என ஏசாயா உரைத்த காலமே நமது காலமாயிருக்கிறது (ஏசாயா 60:2). ஆண்டவர் அருளும் ஆத்தும இரட்சிப்பைக் குறித்த விஷயத்தில், உலகத்திலுள்ள ஜனங்கள் முழுவதும் அந்தகாரத்திலேயே அமிழ்ந்து போயிருக்கிறார்கள் என்பது தெளிவு! சிற்சில ஆலயங்களில் மட்டுமே சுவிசேஷம் நேர்மையாய் பிரசங்கிக்கப்பட்டு மனந்திரும்புதல், மறுபிறப்பு, இரட்சிப்பு தெளிவாய் காட்டப்படுகிறது! ஜனங்கள் ஆண்டவரிடம் வந்து மெய்யான இரட்சிப்படைய அழைப்பும் கொடுக்கப்படுகிறது! ஆனால், அநேக ஆலயங்களில் ‘குணப்படாத கிறிஸ்தவர்களைக் கொண்டு’ ஆராதனைகள் வழக்கம்போல் ‘மாமூலாய்’ நடந்து வருகிறது!
எங்கள் சபையார் எல்லாரும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்றும், மோட்சம் போக தகுதியுள்ளவர்கள் என்றும் போலியாக கருதியே இன்றைய சபைகளில் பிரசங்கம் செய்யப்படுகிறது! ஆனால், இதுபோன்ற சபைகளில் மறுபிறப்பு அடையாதவர்களே மிகுதியாய் இருக்கிறார்கள்!
- ரத்னம்