அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
ஜெபித்தும், நீண்ட காலமாய் பதில் கிடைக்க தாமதமோ? இந்த தாமதம் நம் விசுவாசம் தோதிக்கப்படுவதற்குரிய பரீட்சையாகும்! நமக்கு கிடைத்திடும் ‘பதிலைவிட’ நமக்குள் இருக்கும் விசுவாசமே அதிக மதிப்புள்ளது! வாக்குத்தத்த பூமிக்கு அழைக்கப்பட்ட ஆபிரகாம், பல வருடங்களாகியும் அதை அடையாமல் போனாலும்.... விசுவாசத்தோடே மரித்தான்! என சவாலிடும் வசனம் நம் நெஞ்சில் தங்குவதாக! (எபி.11:13). “அவர் என்னை கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” என முழங்கிய யோபுவின் விசுவாசம், நம்மிலும் பற்றி எரிவதாக! (யோபு.13:15).
இந்த ஒப்பற்ற விசுவாசமே, யவீருவின் குமாரத்தி மரித்துப்போனாலும், லாசரு அடக்கம் செய்து நான்கு நாள் ஆகிப்போனாலும், அவர்களை உயிர்பெறச் செய்தது!