பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

20.07.2026                                                     துளிகள் - 29

‘வறட்சியில் செழிப்பு’ இயேசுவின் சுவிசேஷம்!

 சட்டை பண்ணப்பட்டபோது, மனுஷரால் புறக்கணிக்கப்பட்ட போது.... அந்த, வறட்சியான நிலத்திலிருந்துதான் இயேசு, இளங் கிளையைப் போல, தேவனுக்கு முன்பாக துளிர்ந்து வளர்ந்தார்! என்ற ஆச்சரியமான நிகழ்ச்சி நடைபெற்றது! இதுவே, கிறிஸ்தவர்கள் விசுவாசித்திட வேண்டிய ‘சுவிசேஷம்’ என ஏசாயா 53:1-3 நமக்கு பூரிப்புடன் அறிவிக்கிறது! மனுஷனுக்குரிய பகை, பொறாமை, விரோதம், கோபம் போன்ற நமது சுய ஜீவியம் நமக்கு வெளியே கற்சாடியில் ஊற்றப்பட ஊற்றப்பட..... மதுரமான, பரிசுத்தாவியின் அன்பு நம் இருதயத்தில் ஊற்றப்பட்டு, அதை மொண்டு பிறருக்கு கொடுப்பதே, நம் எல்லோருக்கும் இயேசு பிரகடனம் செய்த மகிமையான சுவிசேஷம்! (யோவான் 2:7,8). எனவே, எங்கே அக்கிரமம் மிகுதியாகிறதோ, அங்கே அன்பு பெருகிடும் வாய்ப்பு ஏராளமாய் பெறுகிறோம். இதற்குப் பதிலாக ‘அக்கிரமம் மிகுதியாக மிகுதியாக’ அன்பு தணிந்து போனது.... எனக் கூறுவது, கிறிஸ்தவம் அல்லவே அல்ல! (மத்தேயு 24:12)

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!