அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
கிறி°துவைச் சார்ந்த வேறு எதைக் காட்டிலும் “கிறி°துவின் மீது கொண்ட அன்பே” வேதம் உயர்வாய் பாராட்டும் “கிறி°துவின் நற்கந்தமாயிருக்கிறது!” (2கொரி.2:15). தன் பரணியிலிருந்த அனைத்து பரிமள தைலத்தையும் ஊற்றி “இயேசுவை முழு இருதயமாய் அன்புகூர்ந்த” அந்த °திரீயின் செயல் இயேசுவின் இருதயத்தை அவ்வளவாய் பரவசப்படுத்திவிட்டது!! ‘கொஞ்சமாய்’ அன்புகூருவதற்கும் ‘அதிகமாய்’ அன்புகூருவதற்கும் இடையிலான வித்தியாசம் “இந்த முழு இருதயம் கொண்ட அன்பே” ஆகும்.
இயேசுவின் பாதத்தில் நளதம் பூசி நற்கந்தம் வீசச்செய்த அந்த ஸ்திரீக்கு.... இயேசு திரும்பி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது! இரட்சிப்பு கிட்டியது! சமாதானம் அருளப்பட்டது! என வாழ்த்தி அனுப்பினார் (லூக்கா.7:48,50). ஓ, எம் இயேசுவே... உம்மை முழுவதும் எனக்காகத் தந்து அன்புகூர்ந்த உம்மை, நாங்களும் “முழுவதுமாய்” எங்களைத் தந்து அன்புகூர்ந்திட உதவும்! என்றே நாமும் ஒவ்வொருநாளும் ஏக்கம் கொள்வோமாக!! (லூக்கா.7:47).