அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
ஜீவியத்தின் ஒரு பகுதிகூட நமக்காக வைத்துக்கொள்ளாமல் “யாவையும்” கர்த்தரிடம் சரணடையச் செய்தவர்கள் பாக்கியவான்கள்! அப்படியானால், கர்த்தர் நிச்சயமாய் நமக்காக “யாவையும்” செய்து முடிப்பார்! (சங்.138:8). நீங்களோ, விசுவாசத்தில் தளர்வடைந்து நீங்களாகவே கிரியை செய்திட முற்பட்டால், உங்களுக்காக கிரியை செய்திட வாஞ்சிக்கும் கர்த்தருடைய வல்ல கரம் உங்களைவிட்டு நீங்கும் துயரம் ஏற்படும்! அவ்வித துயர நேரத்தில் “கர்த்தாவே மன்னியும்! உமது வல்ல கரமே எனக்கு வேண்டும்! தயவாய் உமது கரத்தின் கிரியைகள் என்னைவிட்டு நீங்கிவிடாமல் நிலைத்திருப்பதாக!” என்ற உங்களின் தாழ்மையான சரணாகதி படைத்திடும் ஜெபத்திற்கு கர்த்தர் நிச்சயமாய் மனதிரங்குவார்! இனிமுதல் “அவரது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாமல்” உங்களுக்காக, யாவையும் செய்து முடிப்பார்! ஆமென்.