அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
தன் சீஷர்களோடு ‘தல்மனூத்தா’ என்ற ஊருக்கு இயேசு ஒரு படகில் பயணம் சென்று இறங்கினார்! இன்னமும் அவர் ஊருக்குள் போகவில்லை..... அதற்குள்ளாகவே, அங்கு வந்த ‘பரிசேயர்கள்’ இயேசுவிடம் “நீர் வானத்திலிருந்து வந்தவன் என்று சொல்லுகிறீரே, அப்படியானால் ஒரு அற்புதத்தையாகிலும் வானத்திலிருந்து காண்பியும்!” என தர்க்கிக்கத் தொடங்கினார்கள். இயேசுவோ ‘அற்புதத்தை கண்டு’ தன்னை யாரும் விசுவாசித்திட விரும்பவில்லை! (மாற்கு 8:10-12). மேலும், இயேசு ஒருபோதும் யாரிடமும் தர்க்கம் அல்லது வாக்குவாதம் செய்ததில்லை! அப்படியானால், வழக்கு செய்பவர்களிட மிருந்து தப்பிப்பது எப்படி? ஆம், ‘தர்க்கிப்பவர்களை விட்டு’ ‘மறுபடியும் படவில் ஏறி’ அக்கரைக்கு திரும்பிச் சென்று விட்டார்! (மாற்கு 8:13). ‘தல்மனூத்தாவில்’ எந்த ஊழியமும் செய்யவில்லை.... ஆனால், மாபெரும் ஜீவிய பாதையை அங்கு ஒளிவீசச் செய்துவிட்டார்! ‘தர்க்கிப்பும், முறுமுறுப்பும் நிறைந்த’ இந்த ‘கோணலும் மாறுபாடுமான’ சந்ததியில், நாமோ இயேசு காண்பித்த ஜீவ சுடரை நம் இல்லத்திலும், சபையிலும் பிரகாசித்திடக்கடவோம்.
- ரத்னம்