பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


23.10.2023

26. ‘ஒன்றிற்கும் கவலைப்படாத வாழ்க்கை’ சாத்தியமே!

வுல் கூறும்போது, “நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய் பெருகிற்று” (1தீமோ.1:14) என்றார். நம் ஆண்டவர் இயேசுவுக்குள்ளிருந்த “விசுவாசமும் அன்பும்” வருடங்கள் செல்லச் செல்ல நமக்குள் இன்னமும் அதிகரித்து, அது பரிபூரணமும் அடைந்திட வேண்டுமென்றே இந்த வசனம் நம்மை சவாலிட்டு அழைக்கிறது!

நித்திய இரட்சிப்பிற்கேதுவான விசுவாசம் பெற்றிருக்கிறோம் என கூறும் விசுவாசிகள், நடைமுறை இப்பூலோக வாழ்விற்குரிய விசுவாசத்தை இழந்திடும் துர்பாக்கியமே, இன்றைய கிறிஸ்தவ உலகில் நிலவுகிறது! “அவிசுவாசமும்.... பயமும்” இரட்டையர்கள் என்றே கூற வேண்டும்! “அற்ப விசுவாசியே..... ஏன் பயந்தீர்கள்!” என்றே இயேசு கடிந்து கொண்டார்! (மத்.14:31, மாற்கு 6:50). பயமில்லாத, இருதயம் கலங்காத வாழ்க்கையை, ஒருவன் தேவனிடத்திலும், இயேசுவினிடத்திலும் விசுவாசமாயிருந்தே கண்டடைய முடியும்! (யோவான் 14:1). அதாவது தேவனிடத்திலும் ‘பிறகு’ பணத்தின் மீதும் அல்ல! முதலும் முடிவுமாய் தேவனையே விசுவாசித்து வாழ்பவனே “ஒன்றிற்கும் கவலைப்படாத” வாழ்க்கையை கண்டடைவான்!


- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!