அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
134-ம் சங்கீதம் “கர்த்தரை ஆசீர்வதிப்போரை” குறிப்பிட்டு கூறிய ஓர் அற்புத மான சங்கீதமாகும். “இராக்காலங்களில்” கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஆசீர்வதியுங்கள் (Bless The Lord) என்று இந்த சங்கீதம் துவங்குகிறது. ‘இராக்காலம்’ என்பது நம் வாழ்வில் கடந்து வரும் துன்ப நேரங்களேயாகும்! “இராக்காலத்தில்” கர்த்தருடைய ஆலயத்தில் நின்று, ‘நீரே கதி’ என வாழும் சீஷர்கள் தங்கள் வாழ்வில் பெற்ற விடுதலை ஏராளம் ஏராளம்! அது சாதாரணமானது அல்ல.... பெரும் புயல் நிற்கும்! மலை சமுத்திரத்தில் பெயர்ந்து விழும்! காட்டத்தி மரம் வேரோடு பிடுங்கப்படும்! ஐந்து அப்பம் போல் கொஞ்சத்தில் சகலமும் திருப்தியாகும்! ...... இவ்வாறு ஏராளமான வியத்தகு நன்மைகளை தங்கள் வாழ்வில் “இராக்காலத்தில்” கண்டு பெற்று ருசித்த இந்த சீஷர்கள் செய்திடும் அற்புத பிரதி உபகாரம் ஒன்றே ஒன்றுதான்: தங்கள் உள்ளமெல்லாம் நெகிழ தங்கள் கரத்தை உயர்த்தி தங்கள் எஜமானனை ஆசீர்வதிப்பதுதான்!! ‘இராக்காலத்தில்’ கர்த்தரை நெருங்கி அவரை ஆசீர்வதித்திடும் பாக்கியத்திற்கு இணையானது இந்த உலகில் யாதொன்றும் இல்லை ...... இல்லவே இல்லை!