அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
நாம் துன்மார்க்கருடைய ஆலோசனைகளில் நடப்பதில்லை..... இருளோடு ஒளிக்கு ஐக்கியம் வைப்பதுமில்லை, ஏன்? இருளை கடிந்து கொள்வதற்கும் நாம் தயங்குவதில்லை..... பேலியாளாகிய பாபிலோனோடு கிறிஸ்துவாகிய எருசலேம் இசைவாய் இருப்பதுமில்லை (2கொரி.6:14,15)... ஆகிலும், பாவிகளையும், துரோகிகளையும், நன்றியில்லாதவர்களையும் அன்புகூர்ந்த இயேசுவின் அன்பை, நம் இருதயத்தில் நாம் பெற்றிருக்க முடியுமே! (லூக்கா 6:35).
‘இந்த விசுவாசம்’ கொண்டவர்களுக்கே பரிசுத்தாவியானவர் வல்லமை தந்தருளி, தேவ அன்பை அவர்களின் இருதயத்தில் ஊற்றி விடுவார்!! (ரோமர் 5:5). முதலாவது அன்புள்ளவனாய் இருந்து, போகப்போக அன்பற்றவர்களாய் மாறுவது “எந்த மனுஷனுக்கும்” உரிய பண்பு என 10ம் வசனம் இடித்துரைக்கிறது! “இன்றுவரைக்கும்” அன்புமாறாமல் கொண்ட ஜீவியமே மகிமை நிறைந்த இயேசுவின் ஜீவியம்!
இந்த அன்பே ஒருக்காலும் ஒழிவதில்லை (1கொரி.13:8). நீங்கள் வேண்டுமானால், என்னை உடைத்து இடித்துப்போடுங்கள்..... ஆகிலும் மூன்றாம் நாளில் மீண்டும் எழுந்து வந்து உங்களை அன்புகூருவேன் என சவாலிட்டார்! ஓர் கட்டிடம் அல்ல, இதுபோன்ற அன்புகொண்ட சரீரம் கொண்டவனே அவரது ஆலயம்!! (யோவான் 2:19,20).