அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

14.09.2026 துளிகள் - 37
‘ஒரே விசுவாசம்’ உத்தம ஐக்கியத்தின் ஆதாரம்!
மார்க்க சபைகளில், ஒருவருக்கொருவர் ஒத்துக் கொண்டால் ஐக்கியம் என கருதுவார்கள். ஆனால் நமக்கோ, ஐக்கியத்தின் முதலாவது முக்கிய தேவை, “ஒரே விசுவாசமும்... அந்த விசுவாசத்தை அறிக்கை செய்வதுமேயாகும்” மேலும், இந்த விசுவாசத்திற்கு கீழ்ப்படிவது மூலமாய், நாம் கண்டடைந்த கறையற்ற பரிசுத்த ஜீவியமே.... நம் ஐக்கியத்தின் உறுதியான அடிப்படை ஆதாரமாயிருக்க வேண்டும்!
நம்முடைய பெலவீனமான சுபாவங்கள் அல்லது உள் நோக்கமற்ற சில தவறுகள் அல்லது மேலோட்டமாய் தோன்றும் சில தீமைகள்.... நாம் ஒருவருக்கொருவர் கொண்ட ஐக்கியத்தை சீர்குலைத்திட அனுமதிக்கவே கூடாது. இதற்கு மாறாக, நாம் ஒருவருக்கொருவர் கொண்ட விசுவாசத்திலும் அன்பிலும் கொண்ட ஐக்கியமும், பணிவிடை ஊழியமும், மேற்கண்ட தீமைகளை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றுவதாயிருக்க வேண்டும்!
- ரத்னம்
