அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
‘எனக்கு சொந்தமான ஆடுகள்!’ என மேய்ப்பன் கூறுவதும், அந்த ஆடுகள் ‘மேய்ப்பனை அறிவதுமே’ (யோவான்.10:4) ஒருவன் “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்!” என்று கூறும் பாக்கியத்திற்கு உரியவன்!
வாழ்வில் சம்பவிக்கும் எவ்வித துயரங்களிலும், அது மரணப் பள்ளத்தாக்கின் நேரமாயிருந்தாலும் இந்த மேய்ப்பன் தன் ஆடுகளை நடத்தும் ‘அற்புத பாதை’ அவர்களை “அமர்ந்த தண்ணீரண்டையில்” அல்லது இளைப்பாறுதலுக்குள் அல்லது, விசுவாசத்துடன் சும்மா இருக்கும்படி நடத்துவது தான்! இந்த நடத்துதலுக்கு கீழ்ப்படிந்து இளைப்பாறுதலை கண்டடையும் ஆடுகளை “என்னுடைய ஜனம்!” என ஆண்டவர் மகிழுகிறார் (எபி.4:9). ‘சும்மா இருக்கும் அவனிடம்’ அவரே கிரியை நடப்பித்து, அவன் ஜீவியத்தின் அனைத்து பகுதியிலும் “நன்மையும் கிருபையும்” தொடரச்செய்வார்! (சங்கீதம்.23:6). அல்லேலூயா!