நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

22.10.2026 43வது வாரம்
தேவனால் அபிஷேகிக்கப்பட்ட ஊழியங்களே, நிலைநிற்கும்!

நாம் தேவனுக்காக ஊழியங்கள் செய்வது, பரிசுத்த ஆவியானவரின் பெலனைக் கொண்டு மாத்திரமே செய்திட முடியும்! அவ்வாறு பரிசுத்த ஆவியானவர் பெலன் கொண்டு செய்யப்படும் ஊழியங்கள், மனுஷரால் பெரிதளவில் மெச்சப்படுவதில்லை! ஆனால் “நித்தியத்தை மனதில் கொண்டு செய்யப்படும் உண்மையான ஆவிக்குரிய ஊழியங்களோ” தேவனால் புகழப்படும்! அந்த ஊழியங்களின் மேல் தேவன் தனது முத்தான எழுத்துக்களைப் பதித்து “இந்த ஊழியம் ஜீவன் தரும்! நிலைத்து நிற்கும்!” என எழுதுவார்.
வேத அறிவைக் கொண்டு “ஜனங்களை கவர்ச்சிப்பதற்காக” பிரசங்கித்து.... தாலந்துகளை சுய லாபத்திற்கு பயன்படுத்தி ஜனங்களைத் தன் வசப்படுத்த விரும்பும் இன்றைய ஊழியர்களை, தேவன் ஒருபோதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பமாட்டார்! தேவனுடைய பார்வையில் “ஆவிக்குரிய நிறைவான அபிஷேகம்” இல்லாத எந்த ஊழியமும் நிலை நிற்பதில்லை!
‘என்னை ஆட்கொண்ட கர்த்தரே’ என்னை பயன்படுத்தினார் என்ற அறிக்கையை மாத்திரமே வைத்திருக்கும் தாசர்களை தேவன் பயன்படுத்திய விதமோ மிகவும் அற்பமாகவே தோன்றினாலும், அவ்விதமான ஊழியங்களே நித்திய ஆவியினால், நித்திய ஊழியங்களாய், என்றென்றும் நிலைத்திருக்கும்! அவரது கரத்தில் பயன்பட்ட அந்த தாசர்கள்...... தேவனுக்குமுன் தங்களை வெறும் ‘கருவிகளாகவே’ சமர்ப்பித்து மகிழ்ந்திருப்பார்கள்!! அவர்களது அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை, தன்னை அபிஷேகித்து நடத்திய கிறிஸ்து ஒருவர் தவிர, வேறெதுவும் இல்லை!!
- ரத்னம்
