அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“பகையும், பிரிவினையும்” ஏதேனில் வாழ்ந்த ஆதாம் - ஏவாள் தொடங்கி, இந்த பூமியின் முதல் குடும்பத்திலிருந்த காயீன் - ஆபேல் சகோதரர்கள் தொடர்ந்து, ....இன்றுவரை பிசாசானவன் கிரியை செய்து வருகிறான்! வரப்போகிற புதிய உடன்படிக்கை ஊழியத்தின் ஓர் முக்கியமான சிறப்பாக “பிதாக்களுடைய இருதயத்தை பிள்ளை களுக்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களிடமும்” சேர்த்து வைக்கும் ஊழியமாக மல்கியா 4:6 (பழைய ஏற்பாட்டின் கடைசி வசனம்) பிரகாசிக்கிறது! ஆகவேதான் புதிய உடன்படிக்கையின் ஆண்டவர் இயேசு, ‘பிரிவினையை - விவாகாரத்தை’ முற்றிலுமாய் மறுத்து, அது அவர்களின் இருதயக் கடினம் என, எச்சரித்தார்! அது தேவனுடைய செயல் அல்ல எனவும் உறுதிபட கூறினார்! “பிரிந்து விட்டு, வேறொருவருடன் வாழும்” உணர்வை, தூய்மை இழந்த வேசித்தனம் எனவும் இயேசு பிரகடனம் செய்தார்!
“இயேசுவோடு இருப்பதும், அவரோடு சேர்ப்பதுமே” நம் ஜீவிய - ஊழிய பங்காய் இருக்க வேண்டும்! அப்படிச் சேர்க்காமல், சிதறடிக்கச் செய்பவன் “எனக்கு விரோதி!” எனவும் இயேசு எச்சரித்தார் (லூக்.11:23).