அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
இந்த சூழ்நிலையை உருவாக்கியது யார்? என்ற கேள்விக்கு “...யாருமல்ல, அவரே அதை உருவாக்கினார்!” என உரைத்திடும் மாந்தர்களே, தேவனுடைய சொந்த ஜனங்கள்! அவரே முன்னின்று நடத்தும் மேய்ச்சலின் ஆடுகள்! தாங்கள் பெற்ற பாத்திரம் “பிதா எனக்குத் தந்த பாத்திரம்”என ஏற்று, மேய்ப்பனை பின் செல்பவர்கள்! நாள்தோறும் தொழுவத்தின் வாசலை மேய்ப்பன் திறந்ததும், அவர் நடத்திடும் பாதை எதுவாயிருந்தாலும் “அவர் திறந்த வாசலில் துதி யோடும், அவரது பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசிப்பார்கள்!” அவர்களுக்கு கர்த்தர் என்றென்றைக்கும் நல்லவராயும், இரக்கம் செய்ப வராயும் இருப்பார்! ஏனெனில், சூழ்நிலையைக் குறித்த முறுமுறுப்பும், குறைசொல்லும் அவர்கள் நாவில் இருப்பதில்லை! (சங்கீதம் 100:3-5).