அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
.
26.08.2024
35. கர்த்தர் ஆயத்தம் செய்த பாதையின் ‘முடிவு’ நலமே!
வாழ்க்கை, எக்காரணத்தைக் கொண்டும் “சுமக்க முடியாத பாரச்சுமை” என ஒரு கிறிஸ்தவன் மனம் பதறி கூறவேமாட்டான்! ஏனெனில் ‘நம் திராணிக்கு மிஞ்சி’ வாழ்வின் சுமை நம்மை நசித்துப்போட, தேவன் இடங்கொடார்! என, 1கொரிந்தியர் 10:13 வசனத்தின் மூலமாய் தேவன் நமக்கு அறிவித்திருக்கிறார்!
‘இப்போது’ உங்களுக்கு சுமையாகத் தோன்றும் பழுவைக்கூட, தேவன்மேல் உருட்டித் தள்ளிவிட்டு, அவரோடு நாம் சமாதானமாய் ஜீவித்திடவே தேவன் விரும்புகிறார் (1பேதுரு5:7). ஆகவே, அவர் நமக்காக எந்தப் பாதையை ஆயத்தம் பண்ணி யுள்ளாரோ, அந்தப் பாதையில் நடந்து, அவருடன் சம்பாஷித்து ‘அவரிலேயே’ நாம் பூரண நம்பிக்கை வைத்திடக்கடவோம்! நாம் அப்படிச் செய்திடக் கூடுமானால் “இறுதியில்” தேவனுடைய தயவுள்ள கரத்தின் செயல்களைக் கண்டு, நன்றியோடு அவரை நிச்சயமாய் துதித்திடுவோம்!
- ரத்னம்