அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
27.01.2025
4. ‘ஒருமனம் இல்லாத’ சீருடை சமத்துவம் வீணானது!
ஒரு பள்ளியின் சீருடை அல்லது படை வீரர்களின் சீருடை எனக்கூறும் ‘ஏக சம்மதத்தை’ ஆவிக்குரிய சபையில் கொண்டுவர முயலக் கூடாது. அவ்வாறு சீருடை அணிந்தவர்க ளெல்லாம் நல்ல மாணாக்கர்களாய் இருப்பதில்லை! அல்லது சீருடை (Uniform) தரித்த எல்லா வீரர்களும் நல்ல போர்ச் சேவகர்களாயும் இருப்பதில்லை! அப்படியிருக்க நீங்கள் உருவாக்கி வைத்த சம-சீருடை ஒற்றுமையில் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே ஒரு சபையின் மூப்பர் உருவாக்க விரும்பும் அல்லது திணிக்க விரும்பும் ‘வேற்றுமையில்லாத - சமம் (Uniformity)’ மிகப்பெரிய தோல்வியே ஆகும். ஆம், இன்றும் என்றும் ஐக்கியத்தின் இரகசியம் மனப்பூர்வமானது - Unity of Heart மற்றும், ஒருமனம் Unity of mind கொண்டது! ஆம் அது ஒன்றே, இயேசு விரும்பும் தூய ஐக்கியம்!
- ரத்னம்