அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
10.02.2025
6. மெய் கிறிஸ்தவனாக நிலைத்திருங்கள்!
ஓர் மெய்க்கிறிஸ்தவன் தேவஆவியானவரின் ஆளுகையி லிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, உலகத்தின் மாயை களுக்குத் திரும்பவுமாக அடிமைப்பட்டுவிட்டால், அசுத்தம் பிடித்த மனிதனாகிவிடுகின்றான்!
ஒரு கிறிஸ்தவன் வெகு ஆழமான அடிமைத்தனத்துக்குள் எப்பொழுது விழுகின்றான் என்பது உங்களுக்குத் தெரியுமா? தேவனுடைய வசனத்திற்குப் பொருந்தாத கிறிஸ்தவ மார்க்கத்தின் வெறும் சடங்காச்சார கொள்கைகளுக்குத் தன்னை அனுமதிக்கும் போதுதான்! மார்க்க அடிமைத்தனமானது திருச்சபைக்குரிய வெறும் சடங்காச்சாரம் மாத்திரமல்ல..... நமது சொந்த மனம்போல, தேவனது வழிநடத்துதலுக்கு மாறாக, நாமே நடத்திக்கொள்ளும் ஓர் வாழ்க்கை என்பதை அறியுங்கள்!!
- ரத்னம்