அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
கண்ணுக்குத் தெரியாத ‘நுண்ணிய கொரோனா கிருமி!’ அது, மூக்கின் வழியாக அல்லது வாயின் வழியாக சென்றுவிட்டால், உங்கள் உயர்ந்த சரீரம் சரிந்து, மரணப்படுக்கை அபாயம் ஏற்படும்! இந்த ‘நுண் கிருமி’ அபாயம் அறிந்த உலக மக்கள் அனைவரும் ‘சரீர உயிர் பயத்தில்’ முகக்கவசம் அணிந்து வாழ்கிறார்கள்!
கண்ணுக்குத் தெரியாத (அந்தரங்க) ‘இருதயத்தில் விபச்சாரம்’ கண்ணுக்குத் தெரியாத ‘இருதயத்தில் பகை’ உங்கள் ஆத்தும ஜீவனை அழித்திடும்! என்ற இயேசு இரட்சகரின் எச்சரிக்கையாகிய ‘இதயத்தை காக்கும் உயிர்கவசத்தை’ தூக்கியெறிந்து வாழும் இன்றைய கிறிஸ்த வர்கள் விழித்துக் கொள்ளட்டும்!
‘கொரோனா’ வந்தவன்கூட பிழைத்தாலும் பிழைப்பான்! ஆனால் ‘கண்ணுக்குத் தெரியாமல் இருதயத்தில் ஒளித்து வாழும்’ பாவமோ, நிச்சயமாய் சாகடிக்கவே, சாகடிக்கும்! (மத்.5:22,28,29; ரோமர் 8:13).