அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

17.08.2026 துளிகள் - 33
கர்த்தரை சார்ந்துகொள்ளும் ‘தனி ஜெபம்’ முக்கியம்!
உங்கள் யாவரையும் பார்த்து நான் கூற விரும்புவது என்ன வென்றால், ஒவ்வொரு நாள் காலையிலும் 15 - நிமிட நேரமாவது ‘தேவனோடு தனிமையில் இருக்க’ பழகுங்கள். அதுவும், உங்கள் வேலை எதுவாயிருந்தாலும், அதை துவங்குவதற்கு முன்பாகச் செய்யுங்கள்!
ஜெபத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்கும்போது உன்னத பெலன் உங்களைத் தாங்குவதை காண்பீர்கள். உண்மைதான், நிறைவான மகிழ்ச்சியும் அளவில்லாத அவரது நன்மைகளும் பரலோக பொக்கிஷத்திலிருந்து நாம் தொடர்ச்சியாய் பெறுவது, நாம் தேவனோடு கொண்ட உறவை சார்ந்ததேயாகும்! நாம் தேவனுடைய பிள்ளை என கூறுவதற்குரிய ஒரே நிபந்தனை, நாம் ஆண்டவரை முழுமையாக சார்ந்து கொள்வதில் மாத்திரமே இருக்கிறது!
- ரத்னம்
