அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
ஒரு மனிதன் இவ்வையகத்திற்குள் பிரவேசிக்கும்போது ஒன்றும் அறியாதவனாகவே பிரவேசிக்கிறான். ஆனால் இவ்வுலகைவிட்டுத் திரும்பும் வேளையில், அனேக காரியங்களை அறிந்து கொள்கிறான். இவ்விதம் அவன் தன் வாழ்வின் மூலம் அடையும் அனுபவங்கள், அறிவு, ஞானம் முதலானவைகளே அவன் ஆவியின் பெட்டகத்திற்குள் பிரவேசிக்கின்றது. இவ்வுலகத்தில் நிர்வாணமாக வந்த நாம், திரும்பச் செல்லும்போது பெற்றிருந்த எல்லா வற்றையும் விட்டுவிட்டு நிர்வாணமாகவே செல்ல வேண்டும்! நம்மோடு எவ்வித உலகப்பொருளையும் எடுத்துச் செல்லவே முடியாது. “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம்” (1தீமோ.6:7) என சத்திய வேதம் பறை சாற்றுகின்றது. இங்கு ஏழையோ, பணக்காரனோ, யாவருமே ஒன்றுதான்! ஆனால் நம் ஆவியின் பெட்டகத்திற்குள் பொதிந்து கொண்டதை மாத்திரமே நம்மோடு எடுத்துச் செல்லுகிறோம். இதுவே நமக்கு நித்திய காலமாய் இருக்கப்போகும் ‘சம்பத்து’ ஆகும்! அந்த சம்பத்துக்கள்: நம் இரட்சிப்பு, பரிசுத்தம், தெய்வ நற்குணங்கள் மாத்திரமே! என அறிந்து சேமிப்போமாக!