பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
15.08.2022

8. ‘அவரை அறிந்தவர்கள் பெற்றிடும்’ மாறாத கிருபை!

ம் தேவன் மகா அன்புள்ளவர்! கிருபை நிறைந்தவர்! இந்த உலகத்திலுள்ள மனுக்குலம் அவரது செட்டைகளின் நிழலிலில் தான் வாழ்கிறார்கள்! அவர்கள் தீயோராயிருந்தாலும், நல்லோரா யிருந்தாலும் ‘மனுப்புத்திரர்’ அனைவரையும் அன்புகூர்ந்து காப்பதை ‘அவரது அருமையான கிருபை’ என்றே வேதம் கூறி வியக்கின்றது! (சங்.36:7).

ஆகிலும், அவர் மானிடர் எல்லோர்மீதும் காண்பித்திடும் கிருபையை “கிருபை, கிருபை” என வெறுமையாய் கொண்டாடிச் சென்று விடாதீர்கள்! 10-ம் வசனம் குறிப்பிடும் “உம்மை அறிந்தவர்கள் மேல் உமது கிருபை” என்ற தனிப்பட்ட பாக்கியமே நித்தியானந்தம்! அது, அவரே நம் மேய்ப்பனாய் நின்று நடத்தும் “நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்” தொடரும் நிலைத்திருக்கும் கிருபை! (சங்.23:6). சத்துருக்களோ, மரண இருளோ போன்ற யாவற்றிலிருந்தும் காத்திடும் போதுமான அந்த கிருபை, கர்த்தரை தன் சொந்த மேய்ப்பராய் பெற்றவர்களுக்கே அருளப்படுகிறது! இந்த பாக்கியமே, நமக்கு சொந்தமாய் மாறக்கடவது! 

- ரத்னம்

image
18.08.2022

08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!


ரு மனுஷன் எண்ணற்ற உபத்திரவங்களைச் சுமந்து கொண்டு வந்தும் “அவன் இருதயத்தின் கிண்-கிணி மணி ஓசையை” ரீங்காரமாய் நாம் கேட்கும்போது, அந்த காட்சி நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளாதோ? சோதனை உச்சக்கட்டத்திற்குச் சென்ற ஒருவன், முற்றிலும் ஜெயம் பெற்றவனாய் திரும்ப வருவதைக் காண்பது, கண்கொள்ள காட்சியன்றோ! சூடு- பாலைவனத்தையும் ஊடுருவச் சென்ற ஒரு யாத்ரீகனின் உடல், சற்று துவண்டதுபோல் தோன்றினாலும், உடைபடாத அவனது சகிப்புத் தன்மை நமக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது அன்றோ! ஆ, இந்த அதிசயங்கள் அவரது கிருபைக்கே நிலைத்திருக்கும் சாட்சியும், புகழ்ச்சியும் ஆகட்டும்! எண்ணற்ற வீறுகொண்ட விசுவாச வீரர்களை எழுப்பட்டும்! இயேசுவின் புகழ்கொடி, பட்டொளி வீசி பறக்கட்டும்! இந்த மண்ணின் ஆதாரம் யாவும் இழந்தும்!  இரைச்சலான சமுத்திரம் போலவே ஆனாலும்! இளைப்பாறுதல் அமைதி கொண்டவன் இவனென்று..... இறைவன் பாதுகாத்திடும் அதிசயம் இவனென்று..... இயேசுவுக்கு புகழ் சேர்க்கும் அந்த மாந்தரில், நானும் ஒருவன்தானோ? 

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!