அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
12. ‘தனிமை நீங்கி’ தேவனோடிருப்பதே, ஜெய ஜீவியம்!
03.12.2021
உலக ஆஸ்தி, அந்தஸ்துகளுக்காகப் போராடி அதை சொந்தமாக்கிட நாடும் மாந்தர்களே ஏராளம்! அனைத்தையும் போராடி வென்றும் ‘தேவன் இல்லாத’ தனிமை வாழ்க்கையே யாக்கோபிற்கு எஞ்சியது! (ஆதி.32:24). அதை உணர்ந்த யாக்கோபு, தன்னை சந்தித்த தேவனை, எப்படியாகிலும் சுதந்தரித்துக்கொள்ள அவரோடு போராடி “அவரை தனக்கென வென்றான்!” (வச.28). ‘தனித்திருந்த’ யாக்கோபு, இப்போது தேவனை சுதந்தரித்து, தனிமை நீங்கி ‘இஸ்ரவேல்’ என பெயர் பெற்று, தேவனை மையமாய் கொண்ட ‘கோத்திர பிதாவாய்’ மாறினான்!
நம் ஜீவ காலமெல்லாம் “தேவனை விட்டு விலகாத” ஜீவியத்திற்காய் போராடக்கடவோம்! அதுவே, நம் விசுவாச ஜீவியத்தின், நல்ல போராட்டம்!
- ரத்னம்