அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
பறவையின் பார்வையில் ‘வேடனின் கண்ணி’ தெரிவதில்லை! ‘வைரஸ்’ கிருமியும் அப்படித்தான்! வல்லரசோ அல்லது தேசாதி பதியோ, யாரும் இதற்கு தப்ப இயலாது! அதன் ‘பாழாக்கும் கொள்ளை நோய்’ முழு உலகத்தையும் ஆட்டிப்படைக்கும்! இந்த ‘கண்ணிக்கு’ தப்புவிக்க ஒரே வழி கர்த்தர்! உன்னதமானவர் நம்மை தப்புவித்து காக்கும் பட்டியலின் முதல் பகுதி இந்த வேடனின் கண்ணியான ‘வைரஸ்’ தான்! (சங்.91:3). விடை தரும் இரண்டாம் வசனம் கூறுகிறபடி, யாரெல்லாம் “நீர் என் அடைக்கலம்.... என் தேவன், நான் நம்பியிருக்கிறவர்!” என மெய்யாகவே தங்கள் வாழ்வின் அறிக்கையாய் கொண்டார்களோ, அவர்களை நிச்சயமாய் இந்த ‘வைரஸ்’ வேடனின் கண்ணிக்குத் தப்புவிப்பார்! அல்லேலூயா.