அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
இயேசுவிற்கு வியாகுலமாய் இருந்த நேரம், இம்மண்ணுக்குரிய யாதொரு கஷ்ட சூழ்நிலை அல்ல.... மாறாக அந்த சூழ்நிலையில் “பிதாவின் சித்தம்” செய்திட தடையாய் நின்ற “தன் சுய சித்தத்திற்கே” வியாகுலமடைந்தார்! கெத்செமனே தோட்டத்தில் தனியே சென்று “என் பிதாவே.... என் சித்தத்தின்படியல்ல....” என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்ப கூறினார்! (மத்தேயு.26: 38-44). “என் பிதாவே... என் பிதாவே” என மன்றாடிய இயேசுவின் அடிச்சுவடுகளையே இன்றும் அவரது சீஷர்கள் பின்பற்றுகிறார்கள்! என்ன ஆச்சரியம் “பிதா ஒப்புக்கொடுத்த பாத்திரம்” இயேசுவின் கைகளில் வந்தது! (மத்தேயு.26:45). பிதா அவருக்கு தந்த பாத்திரத்தை பருகிய வெற்றி சிகரமே.... கொல்கொதாவின் கொடுமுடி! கெத்செமனே ஜெபம் தந்த பேரின்பமோ “என் பிதா!” என்ற இனிய பந்தம்!! பிதாவை சந்திக்கும் இயேசுவின் சீஷனை “இந்த இனிய உறவே” ‘சிலுவை பாதையில்’முன்னேறிச் செல்ல நடத்துகிறது !