பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


18.11.2024

47. கர்த்தரோடு தனிப்பட்ட உறவில் அருளப்படுவதே “வாக்குதத்தம்!”

 “நீர் எனக்குத் தந்த வாக்குதத்தம்” என, ஆபிரகாம் கூறியது போல், கர்த்தர் தனிப்பட்ட உறவில் நமக்கு கூறும் வாக்குதத்தமே “உமது வாக்குதத்தம்” என உயிரோட்டமாய் நமக்கும் மாறுகிறது! 

 எப்படியெனில், ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குதத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலேதானே ஆணையிட்டார்! (எபிரெயர்.6:13). ‘தன்னையே தந்து’ வாக்குதத்தம் செய்த விந்தையைப் பாருங்கள். 

 இந்த விந்தையை அவரது வாக்குதத்தத்தில் கண்ட எந்த ஒரு பக்தனும், காலங்கள் எவ்வளவு தாமதித்தாலும், கர்த்தர் நிறைவேற்றுவார் என்பதில் அசையாத விசுவாசம் கொண்டிருப்பான்!

 அவர் தமது பேரிலேதானே ஆணையிட்டு வாக்குரைத்தபோதும், நாம் “நிறைவான ஆறுதலைப் பெறும்படி” இரண்டு மாறாத விசேஷங்களினால் வாக்குரைத்தார் என எபிரெயர் 6:18 கூறுகிறது: 1) அவரது நாமத்தினால் 2)அவரது வார்த்தையினால் என்ற மாட்சிமையே “எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்” என்ற உறுதித்தன்மையை நம் யாவருக்கும் விளங்கச் செய்தார்! அந்த 2-விசேஷங்கள் இணைவதுதான் “உமது வாக்குதத்தங்கள்” என்ற உரிமையை நமக்கு சொந்தமாக்குகின்றது! இனி முதற்கொண்டு, இத்தனை மேன்மையான “உமது வாக்குதத்தங்கள்” நமது ஜீவியத்தின் அலங்காரமாய் மாறிட, தேவன் யாவருக்கும் கிருபை செய்வாராக!

- ரத்னம்


'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!