அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

29.06.2026 துளிகள் - 26
‘சுய சந்தோஷம்’ நாடும் பாதை, அழிவின் பாதை!
இன்றைய 21-ம் நூற்றாண்டின் இந்த மனுக்குலம் கொண்டிருக்கும் கொள்கை யாதெனில் “சந்தோஷமாயிருப்பதற்கே நாங்கள் பிறந்திருக்கிறோம்!” என்ற ஒரு-வரி கொள்கை மாத்திரமேயாகும். இவர்களில் ஒருவராவது “வீழ்ச்சியுற்ற ஒரு மனிதன், சந்தோஷத்தைக் கேட்பதற்கு என்ன தார்மீக உரிமையுண்டு?” என தட்டிகேட்பதற்கு, தைரியம் அற்றவனாக இருக்கிறான். இவர்களின் புத்தகங்கள், ஆடல்-பாடல் ஆராதனை அனைத்தும் அவனவன் தனிப்பட்ட விதத்தில் சந்தோஷத்தைத் தேடும் போட்டியாகவே உள்ளது! தன்னுடைய இழி நிலையை உணர்ந்த எவனும், தான் சந்தோஷமாய் இருப்பதை கேட்பதற்குரிய உரிமை, தனக்கு இல்லையென்பதை உணர்ந்திருப்பான்!
இந்த உலகம் போகட்டும், இன்றைய நவநாகரீக கிறிஸ்தவ உலகம் சுவிசேஷத்தை தங்களுக்கு மகிழ்ச்சியையும், மனம்போன போக்கில் போவதையுமே மார்க்கமாகவே பயன்படுத்துகிறார்கள். இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேதத்தை கூட தங்களுக்கு “போதை மருந்து” போல் திரித்துக் கொண்டாடுகிறார்கள்! தேவனை துக்கப்படுத்தும், இவர்களின் ‘சுய சந்தோஷம்’ கேடு என உணர்வதே, அழிவிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடும்!
- ரத்னம்
