அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
05.05.2025
18. ‘பாவ உணர்வடையச் செய்திடும்’ சுவிசேஷ கூட்டங்கள் தேவை!
இன்று, சீர்கெட்ட சபைகளில் அளிக்கப்படும் ‘தாலாட்டுப்’ பிரசங்கங்கள் ஒழிந்து, “விரியன் பாம்பு குட்டிகளே.... மனந்திரும்புங்கள்” என உரைத்திடும் பிரசங்கமே இன்றைய தேவையாய் இருக்கிறது!
ஜான் பனியன், பேக்ஸ்டர், ஐலீன், எட்வர்ட், வெஸ்லி, ஒய்ட்பீல்டு, பின்னி, பில்லிகிரஹாம்..... முதலியவர்கள், பாவத்தைக் கண்டித்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில், பாவிகள் தங்கள் பாவபாரத்தை உணர்ந்து, அழுது மனந்திரும்பினர். இன்றும், மனந்திரும்பிட அழைக்கும் தெய்வ பக்தி நிறைந்த தாசர்களையே கர்த்தர் நம் மத்தியில் எழுப்புவாராக! இந்த கடைசி காலத்தில், பிரசங்கிமார்கள் ஜனங்களைக் குளிரச் செய்யும் செய்திகளை ஒழித்து, சத்திய வேதத்திலுள்ள மிக முக்கியமும் அவசியமுமான சத்தியங்களையே “அபிஷேக நிறைவோடு” பயமின்றி கூறி அறிவிப்பார்களாக! கலப்படமில்லாத இயேசுவின் சுவிசேஷமே இக்காலத்திற்கு இன்றியமையாத தேவை!
- ரத்னம்