அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
உங்கள் எல்லாப் பொக்கிஷங்களையும் பரலோகத்திற்கு மாற்றுதல் செய்து விடுங்கள்! இது ஒன்றே நீங்கள் கவலையிலிருந்து விடுதலையாவதற்கு இயேசு கற்பித்த, மாறாத நித்திய வழியாகும்! ஏனெனில், உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ ‘அங்கே உங்கள் இருதயம் இருக்கும்!’ என இயேசு வாக்குரைத்தார் (மத்.6:19-21). நீங்கள் மிகவும் அதிகமாய் நேசிக்கும் உங்கள் பிள்ளையை மீண்டும் தேவனுக்கே திருப்பிக்கொடுத்துவிடுங்கள்! உங்களுக்கு மிகவும் பிரியமான யாதொரு இவ்வுலக உடைமை களையும் தேவனிடமே கையளித்துவிடுங்கள்! அவர் அதை என்ன செய்யவேண்டு மென்று விரும்புகிறாரோ அதை செய்வதற்கு அவருக்கே முழு சுதந்திரம் கொடுத்து விடுங்கள். அவர் விரும்பினால், அவ்வுலகப் பொருட்கள் ‘திருடப்படுவதற்குக் கூட’ அனுமதிக்கலாம் அல்லது அவைகள் உடைந்து நாசமடைவதற்கும் அனுமதிக்கலாம்! இவ்வாறு நம்முடைய எல்லா விருப்பங்களையும் இப்பூமிக்குரியவைகளிலிருந்து விலக்கி பரலோகத்தில் வைத்துவிட்டால், நாம் கவலை கொள்வதென்பது ஒருக்காலத்தும் நிகழாததொன்றாய் மாறிவிடும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை!!