பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


29.10.2026                                           44வது வாரம்

‘பரிசுத்த ஜீவியமே’ ஒருவருக்கொருவர் ஐக்கியத்தின் ஆதாரம்!


 மார்க்க சபைகளில், ஒருவருக்கொருவர் ஒத்துக்கொண்டால் ஐக்கியம் என கருதுவார்கள். ஆனால் நமக்கோ, ஐக்கியத்தின் முதலாவது முக்கிய தேவை: “ஒரே விசுவாசமும்..... அந்த விசுவாசத்தை அறிக்கை செய்வதுமேயாகும்” மேலும், இந்த விசுவாசத்திற்கு கீழ்ப்படிவது மூலமாய், நாம் கண்டடைந்த கறையற்ற பரிசுத்த ஜீவியமே.... நம் ஐக்கியத்தின் உறுதியான அடிப்படை ஆதாரமாயிருக்க வேண்டும்!

   நம்முடைய பெலவீனமான சுபாவங்கள் அல்லது உள்நோக்கமற்ற சில தவறுகள் அல்லது மேலோட்டமாய் தோன்றும் சில தீமைகள், நாம் ஒருவருக்கொருவர் கொண்ட ஐக்கியத்தை சீர்குலைத்திட அனுமதிக்கவே கூடாது! இதற்கு மாறாக, நாம் ஒருவருக்கொருவர் கொண்ட விசுவாசத்திலும் அன்பிலும் கொண்ட ஐக்கியமும், பணிவிடை ஊழியமும்..... நம் பழக்க வழக்கங்களையும் மேலோட்டமான தீமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றுவதாயிருக்க வேண்டும்! ஆகவே ‘தெய்வ அன்பில் வளர்ந்து’ கண்டடையும் ஐக்கியம் ஒன்றையே, நம் தீராத வாஞ்சையாகக் கொண்டு, வாழ்ந்திடுவோமாக!


- ரத்னம் 

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!