அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“உங்கள் துக்கம்” சந்தோஷமாக மாறும்! என்றே இயேசு வாக்குரைத்தார்! (யோ.16:20). உலக மாந்தருக்கோ ‘லௌகீக சந்தோஷம்’ தவிர, துக்கத்தின் உயர் மதிப்பு தெரியாது! என, இதே வசனத்தில் இயேசு கூறினார். ‘தேவ மாந்தர்களாகிய’ நாமோ, துக்கத்தின் நடுவில் ‘இயேசுவை’ காண்கிறபடியால், நம் துக்கம்.... எதுவாயிருந்தாலும், நம் இருதயம் சந்தோஷமடைகிறது! இயேசு வோடு கொண்ட ஐக்கியத்தில் விளையும் ‘இந்த சந்தோஷத்தை’ எதுவும் எடுத்துப்போட முடியாது! என, இயேசு உறுதியளித்தார்! (யோவான் 16:22).
சிறைச்சாலையில் யோசேப்பு இருந்தார்.... கர்த்தரும் யோசேப்போடு இருந்தார்! என ‘சிறைச்சாலை’ மாறுவது சந்தோஷமன்றோ! (ஆதி.39:21,22). இயேசுவின் ஆத்துமா கலங்கிய வேளையில், பிதா தன் சமூகத்தை அருளி ‘மகிமைப்படுத்தினேன்’ என முழங்கியதல்லவோ நித்திய சந்தோஷம்! (யோவான் 12:27,28). அல்லேலூயா!