அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
பாவம் நமக்கு வெளியில் இல்லை! “பாவம் எனக்குள்ளேயே வாசமாயிருக்கிறது!!” (ரோமர் 7:20) என பவுல் கூறினார். “நான் கிறிஸ்துவுக்குள் நன்றாக இருந்தேன். இந்த அழகுள்ள ஸ்திரீ அல்லது ஆடவன் என்முன் வந்ததால் என் சிந்தையில் நான் பாவம் செய்து விட்டேன்” எனக் கூறாதீர்கள். ஏனெனில் உங்களுக்குள் இருக்கும் பாவமே உங்களைப் பாவம் செய்யத் தூண்டியது. இவ்வாறு நமக்குள்ளிருக்கும் “பாவ மாம்சம்” அல்லது “மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும்” சோதனை வேளையில் தேவ கிருபையின் ஆவியினால் சிலுவையில் அறைவதே இயேசுவைப்போல பாவத்தின்மீது நாம் அடையும் வெற்றியாகும். இயேசு இவ்வாறுதான் தன் மாம்சத்தில் பாடுபட்டு பாவத்தை ஜெயித்தார் (1பேதுரு 3:18). கிறிஸ்துவைப்போலவே நாமும் மாம்சத்திலே பாடுபட்டால் (Suffered in the flesh) அதாவது நம்மில் தூண்டப்படும் மாம்ச இச்சைகளையும் அதன் ஆசைகளையும் தேவ பெலன் கொண்டு சிலுவையில் அறைந்தால், இயேசுவைப்போல் நாமும் பாவத்தைவிட்டு ஓய்ந்திருப்போம்! (1பேதுரு 4:1,2).