பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

5. யாருக்கு அவருடைய ‘நிச்சயமான’ கிருபை?

தேதி: 13.05.2019

கோடி ரூபாயும், கோடீஸ்வரர் தயவும் இருந்தாலும் ‘ஏற்ற சமயத்தில்’ உதவும் கிருபையை, ஆண்டவர் மாத்திரமே உங்களுக்குத் தந்திட முடியும்! (எபிரெயர் 4:16).

எல்லா இடுக்கண் நேரங்களிலும், வாலிபன் தாவீது, தேவனிடமே ஓடுவான்! தேவ கிருபையைப் பெறுவான்! ஜெயிப்பான்! அதனிமித்தம் அவனில் பிரியமாயிருந்த தேவன் “தாவீதுக்கு நான் அருளின நிச்சயமான கிருபை”என உள்ளம் பூரித்தார்! (அப்.13:34). சவுலுக்கு முன்பாக நின்ற இந்த தேவ இளைஞன் கூறியதைக் கேளுங்கள்: “அரசே, நான் மந்தையை மேய்த்தபோது, ஒரு விசை ஒரு சிங்கத்தை கொன்றேன்! மற்றொரு விசை ஒரு கரடியைக் கொன்றேன்! ‘இப்போது’ அவைகளில் ஒன்றுபோலவே இந்த இராட்சதன் கோலியாத்தை கர்த்தர் கொன்று போடுவார்! ‘யுத்தம் கர்த்தருடையது’ என கெம்பீரித்து, கோலியாத்தை, கர்த்தரின் கிருபையைப் பெற்று கொன்றான்! எந்த இக்கட்டிலும் “அவர் கிருபை எனக்கு நிச்சயம் உண்டு!” என வாழ்வது எத்தனை பாக்கியம்! (1சாமு.17:34,37).

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!