அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

09.02.2026 துளிகள் - 6
‘கிறிஸ்துவோடு இருப்பதே’ உத்தம கிறிஸ்தவ விசுவாசம்!
கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும் மேன்மையை பிலிப்பியர் 3:9-ம் வசனத்தில் பவுல் எழுதுகிறார். அதில் மிக முக்கியமான “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தின் மூலமாய் வரும் தேவனால் உண்டாயிருக்கிற நீதியை நான் உடையவனா யிருக்க வேண்டும் எனவும், கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்” தனது வாஞ்சையை வெளிப்படுத்தினார். இவ்வாறாக விசுவாசத்தின் மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிற நீதியை நாம் அடைவது, கிறிஸ்துவை ஆதாயம் செய்வதற்கு ஒப்பாகவே, பவுல் கருதினார்!
நாளுக்கு நாள் ‘நம்முடைய ஸ்தானத்தை அல்லது நம்மையே இழந்து’ அவரை பற்றிக் கொள்கிறோம். ஆம், அவருக்குள் நாம் காணப்படுவது சொல்லிமுடியாத ஆசீர்வாதம் என்பதை அறிந்திருக்க வேண்டும். இந்த உலகில் சம்பவிக்கும் ஒவ்வொரு ‘அவசர சூழ்நிலையிலும்’ அவரைப் பற்றும் விசுவாசம் எனக்கு போதுமானதாயிருக்கிறது! என்பதை நாம் அனுபவமாய் அறிந்திருக்க வேண்டும்!
- ரத்னம்
