பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
02.05.2023

12. நெருங்கிவந்து “கர்த்தரை ஆசீர்வதித்திடும்” பாக்கியம்!

“கர்த்தரைத் துதியுங்கள்!” என்ற வாக்கியமானது ஆங்கிலத்தில் இரண்டு வித்தியாசமான அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்று “Praise the Lord” என்றும், மற்றொன்று “Bless the Lord” என்றும் கூறப்பட்டுள்ளது “Bless the Lord”  என்ற வாக்கியத்தின் பொருள் “கர்த்தரை ஆசீர்வதியுங்கள்” என்பதேயாகும். நாம் எல்லோரும் கர்த்தரைத் துதித்திருக்கலாம்.... ஆனால், வெகு சிலரே “கர்த்தரை ஆசீர்வதித்திடும்” பொன்னான பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்! துதித்து நன்றி செலுத்த சற்று தூரம் நின்றால் போதும்! ஆனால், ‘ஆசீர்வதித்திட’ ஒருவர் மற்றொருவரை “நெருங்கி” வரவேண்டும்! “கர்த்தரை நெருங்கி வரும்” பாக்கியம் பெற்றவர்கள் மாத்திரமே அவரை ஆசீர்வதித்திடவும் கூடும்!

இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஆசீர்வதியுங்கள் (Bless the Lord)” என்று 134-ம் சங்கீதம் துவங்குகிறது. ‘இராக்காலம்’ என்பது நம் வாழ்வில் கடந்து வரும் துன்ப நேரங்களேயாகும்!

ஏராளமான வியத்தகு நன்மைகளை தங்கள் வாழ்வில் “இராக்காலத்தில்” கண்டு பெற்று ருசித்த இந்த சீஷர்கள் செய்திடும் அற்புத பிரதி உபகாரம் ஒன்றே ஒன்றுதான்: தங்கள் உள்ளமெல்லாம் நெகிழ, தங்கள் கரத்தை உயர்த்தி தங்கள் எஜமானனை ஆசீர்வதிப்பதுதான்! ‘இராக்காலத்தில்’ கர்த்தரை நெருங்கி அவரை ஆசீர்வதித்திடும் பாக்கியத்திற்கு இணையானது இந்த உலகில் யாதொன்றும் இல்லை.... இல்லவே இல்லை!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!