பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

வாலிப பெண்ணே, உன்மீது இயேசு கரிசனையாய் உள்ளார்!

  ரூத் என்ற மோவாபிய விதவையின் வம்சாவழியில் ஆண்டவராகிய இயேசு பிறந்தார், என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு ஒருபோதும் ‘பெண் குலத்தை’ குறைத்து மதிப்பிட்டதோ அல்லது புறக்கணித்ததோ இல்லை! மாறாக, அவர்களை தமது ஊழியத்தில் கனப்படுத்தி வாழ்ந்தார்! 

 மனுமக்களின் பாவம் போக்க மானிடனாக அவதரித்த, அன்பின் தேவகுமாரன், தான் சிசுவாக இருந்தபோது, ஒரு கன்னிப் பெண்ணின் அரவணைப்பில் அமுதுண்டு வளர்ந்தார்! ஆம், கன்னியின் கர்ப்பத்தை அவர் அருவருக்கவில்லை! இயேசு தன் ஊழியத்தில், பெண் மக்களுக்கு அதிக இடம் கொடுத்தார்! அவருடன் அநேக ஸ்திரீகள் ஊழியத்திலே இருந்ததாக தேவனுடைய வார்த்தை கூறுகின்றது (லூக்கா 3:8). பெண் குலத்தின் சுகத்தையும், சந்தோஷ சமாதானத்தையும் நேச இரட்சகர் மனதார விரும்பினார் என்பதை “உன் வேதனை நீங்கி சுகமாயிரு” (மாற்கு 5:34) என்று ‘தன்னைத் தொட்ட பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு’ சொன்னதிலிருந்து நாம் தெளிவாக கண்டு கொள்ளுகின்றோம்!

 சிலுவையில் மரித்த நம் அன்பின் நேசர், “தான் மரித்தாலும் பிழைத்திருப்பதை” முதன் முதலில் ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார்! அவளை துன்பப்படுத்தி, தினமும் அவளை சித்தரவதை செய்து கொண்டிருந்த 7 பிசாசுகளையும் கூட, அவர் அவளிடமிருந்து ஏற்கெனவே துரத்தியிருந்தார்!

 பெண் குலத்தின் பேரில், இரட்சகர் எத்தனை கரிசனையாக இருந்தார் என்பதற்கு அவர் சிலுவையில் தொங்கும் அந்த கடைசி நேரத்தில், தனது அருமை தாயாருக்கு, தனது அன்பான சீஷன் ஒருவனின் மூலமாகக் கொடுத்த ஜீவிய ஆதரவை நாம் காண்கின்றோம்!

 இந்தப் பாழ் உலகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடுகள் இருப்பினும், நாம் நாடிச்செல்லும் பரலோகத்தில் அவை ஒன்றும் கிடையாது! அங்கே கொள்வனை, கொடுப்பனை எதுவும் இல்லை. அந்த பேரின்ப வீட்டில், நாம் எல்லாரும் தேவ தூதர்களாக மாற்றம் பெற்று, நமது ஆத்தும மணவாளனாம் இயேசுவை, என்றுமுள்ள சதாகாலங்களிலும் புகழ்ந்து போற்றி, பாடித் துதித்துக் கொண்டிருப்போம்! அல்லேலூயா.

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!