அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
16.09.224
38. நமது ஜீவியமே, யாவருக்கும் பிரசங்கமாய் மாற வேண்டும்!
எனதருமை சகோதரர்களே, நாம் எங்கோ பிரசங்கிக்க நடந்து ஓடி செல்வதில் நித்திய ஊழியத்திற்கு முழுமையான பயன் ஏதும் நடப்பதில்லை. அதற்குப் பதிலாக, நாம் எங்கெல்லாம் நடந்து செல்கிறோமோ, அங்குதான் நமது ‘ஜீவிய பிரசங்கம்’ உணரப்படவும், காணப்படவும் வேண்டும்!
ஆகவே, இனிவரும் நாட்களில் “உங்கள் ஜீவிய நடையைக் குறித்து கவனம் கொள்ளுங்கள்! அதுவே பிரதானமான பிரசங்க நடைமுறை தேவையாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” எனக்கூறியதைக் கேட்ட, அந்த சபையார் “நாங்கள் உணர்வடைந்தோம், திருந்தி நடப்போம்”என மன எழுச்சியோடு கூறியது மிகுந்த ஆச்சரியமாய் இருந்தது!
- ரத்னம்