அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
01.07.2024
27. ‘உன்னதம் ஏறிட’ குஞ்சுகளின் செட்டைகள் ஆயத்தம் தேவை!
நீங்கள் ‘பத்திரமாய் இருப்பதுபோல’ அமர்ந்திருக்கும் கூடு ‘அவநம்பிக்கையின் கூடாகும்!’. அந்தக் கூட்டை விட்டு நீங்கள் வெளியே வர நேரம் வந்துவிட்டது..... அது, விசுவாசத்தின் செட்டைகளே யாகும்! கூட்டைவிட்டு வெளியே வரத் துணிந்த இந்த தருணத்தில்தான், அந்தப் பறவை ஆகாயத்தை நம்பத் துவங்குகிறது! “தரையில் விழுந்து விடுவோமோ?” என உள்ளத்தில் தோன்றினாலும், அதுவே அந்தப் பறவைக்கு முதல் அனுபவமாய் மாறுகிறது. ஆம், அது கீழே விழுவதில்லை, அதனுடைய இறக்கைகள் ஆதாரமாய் இருப்பதை அந்த குஞ்சுகள் காண்கின்றன! ஒருவேளை இறக்கைகள் தோற்றுவிட்டால், தாய் பறவை பாய்ந்து வந்து தன் செட்டைகளில் பறவை குஞ்சுகளை காப்பாற்றி விடும்! இவ்வாறு, ஒரு பறவைக்கு நடப்பதைப் போலவே, தேவன் உங்களைத் தாங்குவார்! தேவனை மாத்திரமே நம்பியிருங்கள். அவர் நிச்சயமாய் உங்களைத் தாங்கி நடத்துவார்!
- ரத்னம்