பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

3. தனிமையில் சுமையா? நுகத்தில் ‘பிதாவை ஏற்பது’ இலகுவானது!

தேதி: 03.02.2020

வருத்தமான வாழ்வின் பாரங்கள் பல உண்டு! ஆவிக்குரிய தோல்வியான பாரங்களோ, உலக வாழ்வின் பாரங்களோ.... அவைகளை ‘நாமே’ சுமப்பது மனசோர்வையும், இளைப்பையும் தருவது நிச்சயம்! ஆனால், இயேசு தரும் மகிழ்ச்சியான செய்தியோ “என் நுகம்” என்ற ‘இரு காளைகள்’ பூட்டும் வண்டிக்கு, தன் ஜீவியத்தை ஒப்பிட்டார்! (மத்.11:29). ‘ஒற்றையாய்’ தான் சுமக்காமல் ‘இரட்டையாய்’ வெளிப் படுத்தி காண்பித்தார் இயேசு! இவ்வுலக துன்ப பாதையில் இயேசு, தனியாய் இல்லாமல், தன்னோடு பிதாவை அறிந்து வாழ்ந்ததை, முந்தின 27-ம் வசனத்தில் கூறினார்! அவரது நுகத்தில் கூடவே ‘பிதா’ இருந்தார்! இப்போது, அந்த நுகத்தையே நமக்கு அறிமுகப்படுத்தி, அவர் பெற்றதைப்போலவே ‘பிதாவை’ துணையாய் பெறும்படி அழைக்கிறார். ஆ, இப்போது நம் கடின வாழ்வின் சுமை மெதுவாயும், இலகுவாயும் மாறிவிட்டதே! யாருக்கெல்லாம் ‘பிதா’ வெளிப்பட்டாரோ, அவர்கள் பாக்கிய வான்கள்! இயேசு வாழ்ந்ததுபோலவே இப்பூமியில் அவர்கள் அநாதை களல்ல (ஒற்றையல்ல).... சொந்த பிதாவை ‘இரட்டையாய்’ நுகத்தில் பெற்றவர்கள்!!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!