அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
12.08.2024
33. ‘இயேசு விடுதலையாக்கினால்’ மாத்திரமே விடுதலையாவீர்கள்!
‘சகோதரரே! நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களா?’ இரட்சிக்கப் படுகிறதென்றால் இரட்சிப்பின் உபதேசத்தை அறிந்திருக்கிறதல்ல! தேவ அன்பைப்பற்றிப் பிரசங்கித்தும் தேவ அன்பற்றவர்களும்; ஆவியானவரைப் பற்றிப் பிரசங்கித்தும் ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளாதவர்களும்; கிறிஸ்துவை வர்ணித்துப் பேசின போதிலும் அவரை அறியாதவர்களும்; விடுதலையைக் கூறி அறிவித்தும் பாவத்துக்கு அடிமைப்பட்டவர்களும் அநேகர் இருக்கிறார்கள். அறிவு வேறே, அனுபவம் வேறே. கிறிஸ்துவை முழு இருதயத்தோடு ஏற்றுக்கொண்டவர்களே ரட்சிக்கப்பட்டவர்கள். இது எப்படியாவது ஓர் காலத்தில் உங்களில் நடந்திருக்க வேண்டும். வேதாகமத்தைப் பார்த்தால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் இரட்சிக்கப்பட்ட வர்களை நீங்கள் காணமாட்டீர்கள். அப்படியே நாளதுவரையில் எவர்கள் இரட்சிக்கப்படுகிறார்களோ அவர்கள் ஏதோ ஒரு சமயத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களாயிருக்க வேண்டும்! அவரை ஏற்றுக்கொள்ளுதல் ஜீவியத்தில் மாறுதலை உண்டாக்காமற் போகாது. எங்கே கிறிஸ்துவும், பாவியும் சந்திக்கிறார்களோ அங்கே பாவிக்கு ஜீவனும் சமாதானமும் உண்டாகிறது! மற்றபடி அல்ல.
- ரத்னம்