அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
மெய்யான திராட்சைச் செடியாகிய கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் திராட்சைக் கொடி பாக்கியமுள்ளது! தன்னை ‘பெலஹீனமான கொடி’ என உணர்ந்தவர்களே, கர்த்தர் மீது சார்ந்து கொண்டும் விசுவாசத்தில் நிலைத் திருப்பார்கள். செடியாகிய அவரில் நிலைத்திரா விட்டால், கொடியாகிய அவர்கள், உலர்ந்து போவார்கள்! என்பது அவர்களுக்குத் தெரியும்! ‘இங்குதான்’ ஓர் அற்புத நிகழ்வு நடக்கிறது! கொடியான அவன் செடியில் நிலைத்திருக்கும் விசுவாச உறுதியை காணும் கர்த்தர் “செடியாகிய நான் கொடியில் நிலைத்திருப்பேன்” என வாக்குரைத்தார்! கொடியாகிய அவனைப் பார்த்து, அவரே தந்த அங்கீகாரமே “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!” என்ற ‘மிகுந்த கனிதரும்’ அற்புத அங்கீகாரம்! (யோவான்15:5). “பிதாவன்றி..... குமாரன் தாமாய் ஒன்றையும் செய்யமாட்டார்! என நம் விசுவாச முன்னோடியான இயேசுவுக்கே ஸ்தோத்திரம்! (யோவான்.5:19).