அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
‘இளைஞர்’ இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்! என ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுவதை வைத்துப்பார்த்தால், சோர்வில்லாத வாழ்விற்கு ‘வயோதிபர்’ என்றே நாம் கருதத் தோன்றும்! ஆனால், அவரோ அப்படிக் கூறாமல் ‘கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ’ புதுபெலன் அடைந்து.... சோர்ந்து போக மாட்டார்கள்” என்றலல்லவா கூறி முடித்தார்! (ஏசா.40:30,31).
ஆகவே, இவர்களின் ‘புதுபெலன்’ இரகசியம் கேளுங்கள்: ஏசாயா 40:31-ம் வசனத்தின்படி, எத்துன்ப சூழ்நிலையிலும், நாள்தோறும் “கழுகுகளைப்போல் செட்டைகளை அடித்து” உயர எழும்புவார்கள்! ஆம், அவர்களின் ‘ஜெப நேரமே’ அவர்களின் அந்த உயர் ஸ்தலம்! அந்த உயர்ந்த ஜெப ஸ்தலத்தில் ‘கர்த்தருக்கு காத்திருந்து’ தங்கள் அன்றாட பெலனைப் பெற்று திரும்புவார்கள்! இவர்களே, எத்துன்பத்தில் ஓடினாலும் இளைப்படையார்கள்! எந்த சூழ்நிலையில் நடந்தாலும் சோர்ந்து போகார்கள்! ஏன் தெரியுமா? “உன்னதமே, அவர்களின் பெலன்!” அல்லேலூயா.