அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

13.10.2025
41. அவருடைய வீட்டில் பிரவேசிக்கும் இளைப்பாறுதல்!
நாம் கிறிஸ்துவின் வீடாய் இருப்பதற்கே தேவன் விரும்புகிறார்! அவர் தங்கும் நம் இருதயமே “அவரது இளைப்பாறுதல்” பெற்றிடும் பாக்கியம்! அவருடைய வீட்டில் ஒவ்வொரு நாளும் உள்ளே பிரவேசிப்பதே இளைப்பாறுதல் பெற்றிடும் ஜீவியம்! இந்த இளைப்பாறுதலை விசுவாசித்து வாழ்வோர் அனைவரும் “ஜீவனுள்ள தேவனை” விட்டு விலக மாட்டார்கள்! அல்லது இளைப்பாறுதலை இழந்து, ஒருநாளும் தவித்திட மாட்டார்கள்! (எபி.3:6,11,12).
- ரத்னம்
