பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
30.01.2023

5.‘நித்திய ஜீவனை’ தடைசெய்யும், உலக நம்பிக்கை!

ர் பக்தியுள்ள பணக்கார வாலிபன், இயேசுவிடம் ஓடிவந்து, “.....நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் (மாற்கு10:17). பணமிருந்தால், இந்த உலகில் நாம் எதை வேண்டு மானாலும் வாங்கிவிடலாம் என்றே உலகத்தார் எண்ணுகிறார்கள்! அது, அவர்களைப் பொறுத்தமட்டில் சரிதான். ஆனால், அதேபோன்று நம்பிக்கையோடு ஒரு பணக்காரன் நித்திய ஜீவனை அடைவதற்கும் வந்தான் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சியில் எச்சரிக்கையாய் நாம் காண்கிறோம்.  

அவன் கொண்டிருந்த “சுய - நம்பிக்கையைக்” கண்ட இயேசு, அந்த நம்பிக் கைக்குக் காரணமான “அவனுக்கென்று உண்டான யாவற்றையும் (ஐசுவரியத்தையும்) விற்றுவிட்ட பிறகே” நித்திய ஜீவனை அடைய தன்னைப் பின்பற்றி வரும்படி அழைத்தார்! 

ஆனால் அவனோ, தன் “சுய-நம்பிக்கையிலிருந்து” விடுபட விரும்பவில்லை! ஏனெனில் அவன் ‘மிகுந்த ஆஸ்தியுள்ளவனாய்’ இருந்ததே அதற்கு காரணமாகும். ஜீவனைத் தரவேண்டிய இயேசுவின் வார்த்தை “மனமடிவையே” அவனுக்குத் தந்தது. இன்றும் இந்த “மிகுந்த ஆஸ்தி” ஒருவனுக்கு பணமோ அல்லது வேதஅறிவோ அல்லது சுயபுத்தி சாதுரியமோ...... போன்ற யாதொன்றில் இருந்தாலும், அவைகள் யாவற்றையும் வெறுத்து விட்டுவிட வேண்டுமென்றே இயேசு கூறுகிறார். ஏனெனில் இதுபோன்ற “ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையா யிருக்கிறவர்கள்” தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது எனவும் இயேசு உறுதிபட கூறிவிட்டார் (வச.24).

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!