பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


02.10.2023

23. எது மெய்யான பாக்கியம்?

ங்கீதம் 1:1-ம் வசனத்தின் ஆங்கில முதல் வார்த்தை “பாக்கியவான்” (Blessed) என்றும், அந்த அதிகாரத்தின் கடைசி வார்த்தை “அழியும்” (Perish) என்றும் கூறப்பட்டுள்ளது. பாக்கியவானாய் வாழ்ந்தவன் ‘நீதிமான்’ என்றும், அழிவுக்குரியவன் ‘துன்மார்க்கன்’ என்றும் இந்த அதிகாரம் கூறுகிறதே: இதில் விசேஷம் என்னவென்றால் இந்த இருவருமே சபையில்தான் இருந்தார்கள் என்பதை 5-ம் வசனம் எடுத்துக்கூறுகிறது. அப்படியானால், ஒருவன் மாத்திரம் துன்மார்க்கனாய் எவ்வாறு மாறினான்? ஆம், அவன் அந்த மற்றவனைப்போல் தன் பாவங்களை கழுவிக்கொள்ள தன் ஆண்டவருக்கு முன் நாள்தோறும் ‘நிலைத்து’ நிற்கவில்லை! தேவனுக்கு முன்பாக நின்று தன் குறைகளைத் தீர்த்து வாழும் வாழ்க்கையை கடினவாழ்வு என எண்ணிவிட்டான் போலும்! ஆனால் உண்மை யாதெனில், அவ்வாறு தன்னை  தேவனுக்கு முன்பாக “நியாயம் தீர்த்து” நிலை நிறுத்தி வாழ்ந்தவன் “நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட” கனி தரும் மரமாய் செழித்து வாழ்ந்தான்! ஆம் அந்த நீதிமானின் வழி கர்த்தருக்குத் தெரியும்! ஆனால் அந்த துன்மார்க்கன் கர்த்தருக்கு முன்பாக வந்து நிற்காதபடியால், அவனுடைய வழி கர்த்தருக்கு தெரியாது!! (வச.6). நம் வாழ்வின் பாதை, தேவனுக்குப் பிரியமான பாக்கியம் உள்ள பாதையாய் இருந்திட நம்மை அவருக்கு முன்பாக நாள்தோறும் நிறுத்தி வாழ்ந்திடுவோமாக!

.

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!