பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


21.09.2026                                                  துளிகள் - 38

ஊழியத்தில்  ‘விட்டுக்கொடுக்கும்’ விசால மனம் வேண்டும்!

 ரு பெண் “ஆட்டுக்குட்டியின் கதறும் அபாய குரலை நான்தான் முதலில் கேட்டு ஓடி வந்தேன்” என கூறினாள். மற்றொரு பெண்ணோ “இந்த ஆட்டுக்குட்டி, நான் வந்த பிறகுதான் தூக்கியெடுக்கப்பட்டது!” என வாதாடினாள். எப்படியாகிலும் “குழியில் விழுந்த ஒரு ஆட்டுக்குட்டி, மரித்து விடாமல் தூக்கியெடுத்து காக்கப்பட்டது” என்ற அற்புதத்தை இவர்கள் இருவருமே மறந்து வாதிட்டது, மிகுந்த வேடிக்கையாயிருந்தது!

 இன்னும் அதிக வேடிக்கை என்னவென்றால், இதே பிழையை இன்றைய கிறிஸ்தவ விசுவாசிகள் செய்வதுதான்! ஒருவருடைய பாவ வாழ்க்கை மாற வேண்டுமென்று நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் சபையிலுள்ள மற்றொரு சகோதரன் என்னிடம் வந்து, நான் ஜெபித்துக்கொண்டிருக்கும் ‘அதே ஆத்துமாவின் விடுதலைக்காக’ தானும் ஜெபிப்பதாக கூறியவுடன், என் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு குமுறல் “என் ஜெபத்தின் மூலமாய் தான்” அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும்! என்பதாய் இருப்பதைக் கண்டு நான் மனந்திரும்பினேன். 

 மேலும், அவருக்கு கிடைக்க வேண்டிய விடுதலை என் மூலமாய் கிடைக்காமல் போனாலும் “வேறு யார் மூலமாவது கிடைக்கட்டுமே” என்ற பரந்த உள்ளம் என்னிடத்தில் இல்லை என்பதை கண்டு,  தேவனிடம் மன்னிப்பு கேட்டு, திருந்தினேன்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!