அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
அன்று 2000-வருடங்களுக்கு முன் “மேசியாவை கண்டோம்” என அவரைத் தங்கள் அகக்கண்களால் கண்ட சீஷர்கள் அவரை உடனே பின்பற்றினார்கள். இவ்வாறு தங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னைப் பின்பற்றிய சீஷர்களாகிய பேதுருவிடமோ, யோவானிடமோ அல்லது யாக்கோபிடமோ இயேசு, “நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டுமென்றால் 1) உங்கள் இன பந்துக்களை வெறுத்திட ஆயத்தமாய் இருக்க வேண்டும் 2) உங்கள் ஜீவனை வெறுத்து சிலுவை எடுக்க வேண்டும் 3) உங்களுக்குண்டான யாவற்றையும் வெறுக்க வேண்டும்” என நிபந்தனைகளைக் கூறவேயில்லை (லூக்கா 14:26,27,33). அப்படி அவர் கூறியிருந்தால், தங்கள் கண்குளிர மேசியாவைக் கண்ட அந்த சீஷர்கள், “ஆண்டவரே உம்மோடு உறவாடி உம்மைப் பின்பற்றும் பாக்கியமே எங்கள் மேன்மை! இது என்ன 3- நிபந்தனைகள்..... 30 நிபந்தனைகள் ஆகட்டும் அல்லது 300 நிபந்தனைகள் ஆகட்டும், அது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல!!” என்றே நிச்சயமாய் கூறியிருப்பார்கள். ஏனெனில், 2000-வருஷங்களுக்கு பிறகு “இன்று” ஆண்டவர் இயேசுவை தரிசித்து அல்ல, விசுவாசித்துப் பின்பற்றும் உத்தம சீஷர்களின் கூற்றும் இவ்வாறாகவே இருக்கிறது!
- ரத்னம்