அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“கொரிந்தியரே, எங்கள் உள்ளம் உங்கள் நிமித்தம் விசால மாயிருக்கிறது!... ஆனால், உங்கள் உள்ளமோ அப்படியில்லாமல் சுருங்கியிருக்கிறதே” என பவுல் கொரிந்தியருக்காய் அங்கலாய்த்தார் (2கொரி6:11,12). குடும்பத்திலோ அல்லது சபையிலோ ‘எத்தனைபேர் இருந்து’ என்ன பிரயோஜனம்? அவர்கள் நம் நெஞ்சில் இல்லையே! நெஞ்சில் எத்தனை பேரோ, அத்தனை பேருக்குத் தானே பரிசுத்தாவியானவர் “தெய்வ அன்பைப்” பொழிவார்!!
ஓ என் தேவனே, உம் சிலுவையின் பாதையில் எம் இருதயத்தை நொறுக்கி அதை விசாலப்படுத்தும்... எம் குருவைப் போலவே “அளவில்லாத ஆவியைப் பெற்று” எண்ணற்றோரை ஆசீர்வதித்திட அருள் புரிந்திடும்!! என குமுறும் ஜெபம் கொண்ட ஏராளமான தெய்வ தாசர்களை நம் குடும்பத்திலும் சபையிலும் தேவன் எழுப்புவாராக! ஆமென்!!