அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
இயேசு கண்ணீர் விட்டார்! ஒருமுறை லாசரு மரித்த நேரத்திலும், மறுமுறை எருசலேம் நகரத்திற்காகவும் கண்ணீர் விட்டார்! ஆனால், “கொல்கொதாவின் கொடூர துன்பத்தில்” எருசலேம் குமாரத்திகள் “அவருக்காக அழுததை” ஏற்றுக்கொள்ள மறுத்தார்! “சுய - பரிதாபம்” நாம் அழித்து வாழவேண்டிய “ஓர் கொடிய சுயம்” என அறியக் கடவோம்! மனுஷர்களுக்கு முன்பாக வடிக்கும் கண்ணீரும், அவர்களின் ஆறுதலும் வீண்! “மானிட ஆறுதல்” வஞ்சனைக்குரியது! என நாம் அறிவது நலம்! எந்த மனுஷரிடத்திலும் ‘சுய பட்சாதாபம்’ தேடி கண்ணீர் விட மறுக்கும் “திட நெஞ்சம் கொண்ட” சீஷர்கள் மாத்திரமே, இயேசுவின் பாதத்தில் கண்ணீர் விடவும், அவரின் ஆறுதல் பெறவும் பாக்கியம் பெற்றவர்கள்! இவர்களுக்கே “தேற்றரவாளனை” இயேசு தந்தருளியுள்ளார்!